ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு-2026 நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில், தமிழ்நாட்டை விட ஆந்திராவில் முதலீட்டாளர்கள் அதிக முதலீடு செய்யவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இதை எப்படி பார்க்கிறீர்கள் என்று சந்திரபாபு நாயுடுவிடம் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
.
அதற்கு பதிலளித்த அவர், " இந்தியாவில் மொத்தம் 28 மாநிலங்கள் இருக்கின்றன. அந்த 28 மாநிலங்களும் முதலீட்டை ஈர்ப்பதற்காக போட்டியிடும். ஆனால் எந்த மாநிலத்தில் முதலீடு செய்யலாம் என்று முதலீட்டாளர்கள் தான் தீர்மானிப்பார்கள்.
இந்தியாவில் 31 தொழில் மாநாடுகள் நடந்திருக்கிறது. அதில் 8 மாநாடுகளை நான் நடத்தியிருக்கிறேன். 1998-ல் முதலீட்டாளர்களுடன் இணைந்து நான் செயல்பட்டப்போது பணக்காரர்களுக்கு ஆதரவாக இருக்கிறீர்கள் என்று பேசுவார்கள் என சொன்னார்கள். ஆனால் அதனை நான் பொருட்படுத்தவில்லை.
முதலீட்டாளர்களுக்கு நிறைய ஊக்கத் திட்டங்களைக் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் நம்மை தேடி வருவார்கள். முதலீட்டை பொறுத்தவரை ஸ்ரேட்டஜி மிகவும் முக்கியம். அதன்படி தான் நான் செயல்படுகிறேன்" என்று கூறியிருக்கிறார்.
.மேகதாது: "எந்த எல்லைக்கும் போவோம்.!'- டி.கே. சிவக்குமாரின் பேச்சு; மாணிக்கம் தாகூர் கண்டனம் .
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
<a href="https://tinyurl.com/2b963ppb">இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…</a><a href="https://tinyurl.com/2b963ppb"> https://tinyurl.com/2b963ppb</a>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… <a href="https://tinyurl.com/2b963ppb">https://tinyurl.com/2b963ppb</a>








