உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா

தேசிய நெடுஞ்சாலையில் தவெக அமைச்சரின் காரை மறித்த போராட்டக்காரர்கள்; பரபரப்புக்குள்ளான வேலூர்

தினப்புயல் • • 1 நாள் முன்பு • சுமார் 1 நிமிடம்
தேசிய நெடுஞ்சாலையில் தவெக அமைச்சரின் காரை மறித்த போராட்டக்காரர்கள்; பரபரப்புக்குள்ளான வேலூர்
வாசிப்பு
Facebook Telegram

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சத்துவாச்சாரி அருகேயுள்ள நடப்பாறை பகுதியில், 1981-ம் ஆண்டு வீட்டுவசதி வாரியத்துக்காக 485 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. அதில், எந்தவிதமான பணிகளும் மேற்கொள்ளப்படாத காரணத்தால் 450 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் மீண்டும் உரியவர்களிடமே விடுவிக்கப்பட்டதாகவும், 23 ஏக்கர் 84 சென்ட் நிலம் மட்டும் விடுவிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், 23 ஏக்கர் 84 சென்ட் நிலங்களையும் விடுவிக்கக்கோரி அதில் வசிக்கும் மக்கள் அக்டோபர் 8-ம் தேதி முதல் இரவு, பகலாக கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தின் 26-வது நாளான இன்றைய தினம், வேலூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தேசிய நெடுஞ்சாலையில் காரில் வந்துகொண்டிருந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜிடம் போராட்டக்காரர்கள் பதாகைகளைக் காண்பித்து காரை நிறுத்துமாறு கூச்சலிட்டனர்.

.

அமைச்சரின் வாகனமும், அவருடன் வந்த பாதுகாப்பு வாகனங்களும் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டது. காரில் இருந்து இறங்கிவந்த அமைச்சர் காந்திராஜின் காலில் போராட்டக்காரர்களில் ஒருவர் திடீரென விழ முயன்றார். அவரைத் தடுத்த அமைச்சர் மனுவைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் கவனப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதையடுத்து, அமைச்சருக்கு `நன்றி’ தெரிவித்துவிட்டு போராட்டக்காரர்கள் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறினர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பான சூழ்நிலையும் காணப்பட்டது.

."அரசுப் பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது ஏன்?" – தவெக அரசுக்கு சீமான் கேள்வி

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →