கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லட்சாதிபதி. இவருக்கும் உரையூர் ஊராட்சி செயலாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், ஊராட்சி செயலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதன் அடிப்படையில், லட்சாதிபதியை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றிருக்கின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லட்சாதிபதியின் மனைவி கண்மனி, காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஒருகட்டத்தில் காவல்நிலையத்துக்கு வெளியே சென்றவர், உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு, காவல் நிலையத்துக்குள் நுழைந்திருக்கிறார்.
.
இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் கண்மணியை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கின்றனர். ஆனால், கண்மணிக்கு தீக்காயம் அதிகமாக இருந்த காரணத்தால் அவரை மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் கண்மணியின் உறவினர்கள், காவல் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
.
இந்த சம்பவம் குறித்து பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் மன வேதனை அளிக்கிறது தன் கணவரை விசாரணைக்கு அழைத்து வந்ததை பற்றி முழு விவரத்தையும் சரியாக தெரிவிக்காததால் மற்றும் தாங்கள் கொடுத்த புகாரின் மேல் நடவடிக்கை எடுக்காமல் ஒருதலைப் பட்சமாக நடந்து கொண்டதால் கண்மணி என்ற பெண் உடல் முழுவதும் தீக்காயத்தோடு காவல் நிலையத்திற்குள் உடல் எரிய எரிய வந்திருக்கிறார்.
.
அப்படியென்றால், சாமானிய மக்கள் சாதாரண புகாரோடு காவல் நிலையத்திற்கு வந்தால் நமக்கு நீதி கிடைக்காது என்று எவ்வளவு மன வேதனை இருந்தால் உடல் வேதனையும் பொருட்படுத்தாமல் தீ குளித்து இருப்பார்… தமிழ்நாட்டில் சாமானிய மக்களின் நம்பிக்கை சிதைந்து கொண்டிருக்கிறதா.. தன்னையே சிதைத்து கொண்டு தான் ஒரு சாமானிய பெண் காவல் நிலையத்தில் நீதி கேட்க வேண்டியிருக்கிறதா?.. என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்…?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
.ஆபாசக் குறுஞ்செய்தி? “ஆட்சியரே புகார் அளித்தால்தான் நடவடிக்கையா?" – தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
<a href="https://tinyurl.com/2b963ppb">இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…</a><a href="https://tinyurl.com/2b963ppb"> https://tinyurl.com/2b963ppb</a>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… <a href="https://tinyurl.com/2b963ppb">https://tinyurl.com/2b963ppb</a>








