உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா புதுப்பிப்பு

“ `திறந்துதான் பாருங்களேன்னு' சொன்னாங்க; இப்போ அடித்தளமே ஆடிப்போய் கிடக்குது..!"- முதல்வர் விஜய்

தினப்புயல் • • இப்போதே • சுமார் 1 நிமிடம்
“ `திறந்துதான் பாருங்களேன்னு' சொன்னாங்க; இப்போ அடித்தளமே ஆடிப்போய் கிடக்குது..!"- முதல்வர் விஜய்
வாசிப்பு
Facebook Telegram

தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழா கடந்த சில ஆண்டுகளாக நடந்துவருகிறது. அதன் அடிப்படையில் சென்னையில் நடந்த கல்வி விருது வழங்கும் விழாவில் முதல்வர் விஜய் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “வாழ்க்கையில் எங்கெல்லாம், எப்போதெல்லாம் நீங்கள் உஷாராக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த ஊழல் என்பது பழைமையான விஷயம்தான். ஆனால், மக்கள் அதற்குப் பழகிப்போய்விட்டார்கள் என்று நினைத்து, நம்மால் அதைக் கடந்து சென்றுவிட முடியாது. அது ஒரு நாள்பட்ட நோய் போன்றது. அதைக் குறைந்தபட்சம் கட்டுப்படுத்தலாம்.

.

அப்படி நான் எடுத்த சில நடவடிக்கைகளால்தான், இங்கே சிலருடைய அடித்தளமே ஆடிப்போய்க் கிடக்கிறது. இப்போது சமீபத்தில் கல்வியிலேயே ஊழல் நடந்திருக்கிறது என்றால், அதை எப்படிப் பார்த்துக்கொண்டு இருக்க முடியும்? கல்வித் துறைதானே எல்லாவற்றுக்கும் ஓர் அடித்தளம்? பள்ளிப் பாதுகாப்பில் வந்த ஊழலால்தான் கும்பகோணம் பள்ளி விபத்து நடந்தது. இப்போது நினைத்தால்கூட மனம் பதறுகிறது. `என் மேசையில் மூன்று ஃபைல்கள் இருக்கின்றன' என்றுதான் சொன்னேன். உடனே எதிர்க்கட்சியிலிருந்து, `அதைத் திறங்களேன்… திறந்துதான் பாருங்களேன்!'-ன்னு சொன்னாங்க. `சரி'னு திறந்தோம். அதைதான் இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.

.

பிள்ளைகள் படிக்கும் நூலகப் புத்தகங்களில்கூட ஊழல் செய்திருக்கிறார்கள். சத்தியமாக இவர்களையெல்லாம் எங்கே கொண்டுபோய் வைப்பது, என்ன செய்வது என்றே எனக்குப் புரியவில்லை. கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்த முறைகேடு வெளியே வருகிறது. இன்னும் மற்ற நூலகங்களிலெல்லாம் என்னென்ன நடந்திருக்கிறதோ, ஒவ்வொன்றாக வெளியே வரும். இதெல்லாம் அறிவு உலகமா இல்ல ஊழல் உலகமான்னு எனக்குத் தெரியவில்லை. நான் அரசியலுக்கு வந்தது ஒவ்வொரு குடும்பத்துக்காகவும்தான். உங்கள் வாழ்க்கை பாதிக்கிற அளவுக்கு இப்படி எதையும் நடக்கவிடமாட்டேன்." என்றார்.

."தவெக MLA அருளைக் காப்பாற்ற முயன்ற முதல்வர் விஜய் மன்னிப்புக் கேட்க வேண்டும்" – வானதி சீனிவாசன்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

<a href="https://tinyurl.com/2b963ppb">இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…</a><a href="https://tinyurl.com/2b963ppb"> https://tinyurl.com/2b963ppb</a>

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… <a href="https://tinyurl.com/2b963ppb">https://tinyurl.com/2b963ppb</a>

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →