உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா புதுப்பிப்பு

திருப்பரங்குன்றம் தூண்: "மதுரை IAS அதிகாரி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்வார் போல" – நீதிபதி

தினப்புயல் • • இப்போதே • சுமார் 1 நிமிடம்
திருப்பரங்குன்றம் தூண்: "மதுரை IAS அதிகாரி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்வார் போல" – நீதிபதி
வாசிப்பு
Facebook Telegram

மதுரையில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை நீக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சுமத்ஜி ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

முன்னதாக மாவட்ட ஆட்சியர், காவல்துறை துணை ஆணையர் ஆகியோர் மதியம் 12.30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டுமென நீதிபதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் ஆஜரகாததைக் குறிப்பிட்டு பேசிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா ஆஜராகாமல் வழக்கை விசாரிக்க முடியாது. கண்டிப்பாக மதியம் 1.15 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த கிருஷ்ணா நேரில் ஆஜரானார்.

மனுதாரர் தரப்பில், சுற்றுவட்டாரங்களில் இருந்து வருபவர்கள் திருப்பரங்குன்றத்தில் அனுமதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வருபவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. அனுமதிக்கப்படுகிறார்கள். உச்சநீதிமன்ற உத்தரவில் உயர்நீதிமன்றம் தலையீடுவதற்கு தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

.

இதைத் தொடர்ந்து பேசிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "உச்சநீதிமன்ற தீர்ப்பில் உயர்நீதிமன்றம் தலையிடாது. 144 தடை உத்தரவு ஏன் போடப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பைச் செயல்படுத்த கூடாது என்பதற்காகத்தான் 144 தடை உத்தரவா? மாநில அரசு விரும்பினால் சி.ஆர்.பி எப் உதவியை நாடலாம் என உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது. மாநில அரசு உதவியை விரும்பவில்லை. நாங்கள் என்ன செய்வது?" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், "கடந்த ஆண்டு தூணில் தீபம் ஏற்றாமல் இருக்க என்ன நடந்ததோ? அதேபோன்றுதான் தற்பொழுதும் நடைபெறுகிறது. மதுரை இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்வார் போல" என தெரிவித்தவர். பக்தர்களின் மத உரிமையைப் பாதுகாக்க வேண்டுமெனக் கூறிய நீதிபதிகள் வழக்கை மாலை 4 மணிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

.`144 தடை' – திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி வளைத்த காவல்துறை; நாளைவரை நீடிக்கும் தடை உத்தரவு!

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →