உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா

US Mid Term Election: செனட் சபையை இழந்தது ட்ரம்ப் கட்சி – தட்டித் தூக்கிய ஜனநாயகக் கட்சி!

தினப்புயல் • • இப்போதே • சுமார் 1 நிமிடம்
US Mid Term Election: செனட் சபையை இழந்தது ட்ரம்ப் கட்சி – தட்டித் தூக்கிய ஜனநாயகக் கட்சி!
வாசிப்பு
Facebook Telegram

அமெரிக்காவின் மிட் டேர்ம் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன.

அமெரிக்காவின் நாடாளுமன்றம் காங்கிரஸ். இதில் மேல்சபை, கீழ்சபை என இரண்டு அவைகள் உள்ளன.

.

மேல்சபையான செனட்டில் இப்போது அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி (ட்ரம்ப் எதிர்க்கட்சி) பெரும்பான்மை பெற்றிருக்கின்றனர்.

செனட்டில் மொத்தம் 100 இடங்கள். இதில் பெரும்பான்மை பெற கட்சிகளுக்கு 51 இடங்கள் தேவை.

இப்போது 52 இடங்களைப் பெற்று முன்னிலையில் இருக்கிறது ஜனநாயகக் கட்சி. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கட்சியான குடியரசுக் கட்சி 40 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆக, செனட்டில் ஜனநாயகக் கட்சிக்குத்தான் அதிக வாய்ப்புகள்.

இதேபோல, அமெரிக்காவின் கீழ்சபையான House of Representatives-லும் ஜனநாயகக் கட்சிதான் முன்னிலையில் உள்ளது.

.

இதை நிச்சயம் ட்ரம்ப் எதிர்பார்த்திருக்கமாட்டார். அவரது விரக்தியைத் தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில், “நான் தேர்தலில் போட்டியிடவில்லை.

ஒருவேளை நான் போட்டியிட்டிருந்தால், நாம் மிகப்பெரிய அமோக வெற்றியைத் பெற்றிருப்போம்!” என்று பதிவிட்டுத் தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக்கொள்கிறார் போலும்.

கீழ்சபை, மேல்சபை இரண்டிலும் ஜனநாயகக் கட்சியின் (ட்ரம்ப் எதிர்க்கட்சி) கை ஓங்கினால், ட்ரம்பின் அதிரடி குறையும். முன்பு போல, அவரால் எந்தச் சட்டத்தையும் எளிதாக நிறைவேற்ற முடியாது. காரணம், காங்கிரஸின் ஒப்புதல் தேவை.

.

ட்ரம்ப் தற்போது அதிபராகப் பதவியேற்றதிலிருந்து காங்கிரஸில் அவரது கட்சிக்குத்தான் பெரும்பான்மை இருந்து வந்தது. இதனால், அனைத்துச் சட்டங்களையும் எளிதாக நடைமுறைக்குக் கொண்டுவந்துவிட்டார். இனி இது கடினமாகும்.

இந்தச் சூழலுக்கும் பதிலளிப்பதுபோல, ‘Veto’ என்று பதிவிட்டுள்ளார் ட்ரம்ப்.

Veto என்றால் அதிபரின் அதிகாரத்தில் அனைத்து சட்டங்களையும் நடைமுறைக்குக் கொண்டுவர முடியும்.

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →