உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா

`வாரத்துக்கு ஒருநாள் வேட்டி சட்டை' – தவெக அரசின் முடிவை விமர்சிக்கும் சிபிஎம்! – என்ன காரணம்?

தினப்புயல் • • 1 நாள் முன்பு • சுமார் 1 நிமிடம்
`வாரத்துக்கு ஒருநாள் வேட்டி சட்டை' – தவெக அரசின் முடிவை விமர்சிக்கும் சிபிஎம்! – என்ன காரணம்?
வாசிப்பு
Facebook Telegram

சென்னை எழும்​பூரில் உள்ள அரசு அருங்காட்​சி​யகத்​தில் தமிழ் வளர்ச்சி மற்​றும் செய்தித் துறை சார்​பில் தமிழ்​நாடு நாள் விழா நேற்று நடைபெற்​றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ராஜ்மோகன், “முதல்​வர் வாரத்​தில் ஒருநாள் பட்டு வேட்டி, சட்டை அணிந்து வரு​கிறார். அதேபோல் தலை​மைச் செயல​கம் உள்​ளிட்ட தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலு​வல​கங்​களி​லும் வாரத்​தில் ஒருநாள் அமைச்​சர்​கள் மற்​றும் அதி​காரி​கள் வேட்டி, சட்டை அணிந்து வர நடவடிக்கை வேண்​டும் என முதல்​வரிடம் கோரினேன். வேட்டி, சட்டை அணிவது தமிழர்​களின் மரபைப் போற்​று​வதுடன், நெசவாளர்​களின் வாழ்​வாதா​ரத்​துக்​கும் உதவும் என்​ப​தால் இதற்​கான ஏற்​பாடுகளைச் செய்ய முதல்​வர் உத்​தர​விட்​டார்.

.

இதன்படி, தமிழ் வளர்ச்​சித் துறை சார்​பில் இனி வாரத்​தில் ஒருநாள் அனைத்து அரசு அலு​வல​கங்​களி​லும் ‘மரபு ஆடை தினம்’ கடைப்​பி​டிக்​கப்​பட உள்​ளது." என்றார். அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் இதுதொடர்பான விவாதம் தொடங்கியது.

இந்த நிலையில், இது குறித்து தவெக அரசுக்கு ஆதரவளித்துக்கொண்டிருக்கும் சிபிஎம் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், “மாண்புமிகு தமிழ்நாடு தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் திரு ராஜ்மோகன் அவர்கள் வாரத்தில் ஒரு நாள் அரசு ஊழியர்கள் மரபு உடை அணிந்து அலுவலகத்திற்கு வர வேண்டுமென அரசாணை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார். இது முற்றிலும் பொருத்தமற்ற நடவடிக்கை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

.

மாநிலத்திற்குள்ளேயே மரபு உடை என்பது வேறுபட்டதாகவும் இருக்கிறது. தங்களுடைய மரபு உடையை ஒவ்வொருவரும் அணிந்து வருவது என்பது தேவையற்ற விவாதங்களை எழுப்பும், கேள்விக்குள்ளாக்கப்படும். இத்தகைய ஆடை குறித்த வழிகாட்டுதல்கள் நிகழ்கால சமூகச் சூழலில் தவறான முறையில் விரிவாக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு அமைச்சர் அவர்களின் அந்த ஆலோசனையை கைவிட வேண்டுமென தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறது.

.`எட்டு தலித் அமைச்சர்கள் வந்துவிட்டால் எல்லாம் மாறிவிடுமா..?’ – அமைச்சர் வன்னி அரசு.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

<a href="https://tinyurl.com/2b963ppb">இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…</a><a href="https://tinyurl.com/2b963ppb"> https://tinyurl.com/2b963ppb</a>

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… <a href="https://tinyurl.com/2b963ppb">https://tinyurl.com/2b963ppb</a>

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →