உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா

'சட்டம் – ஒழுங்கு சீர்குலைவுக்கு டாஸ்மாக் மதுக்கடைகளே காரணம்!' – அமைச்சர் ஷாஜகான் பேட்டி

தினப்புயல் • • 30 நிமிடங்கள் முன்பு • சுமார் 1 நிமிடம்
'சட்டம் – ஒழுங்கு சீர்குலைவுக்கு டாஸ்மாக் மதுக்கடைகளே காரணம்!' – அமைச்சர் ஷாஜகான் பேட்டி
வாசிப்பு
Facebook Telegram

த.வெ.க அரசு பொறுப்பேற்று 6 மாதங்களே முடிவடைந்திருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொலைச் சம்பவங்கள் தொடர்து நடப்பதற்கு மது மற்றும் போதை பழக்கமே முக்கிய காரணியாக உள்ளது என அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார்

நெல்லை மாவட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அக்கட்சின் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் இன்று வருகை தந்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "த.வெ.க தலைமையிலான சமூக நீதி வெற்றிக்கூட்டணி சார்பான இந்த ஆட்சி பொறுப்பேற்று 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் சிறுபான்மை மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு கண்டு வருகிறோம்.

.

நெல்லை மாவட்டத்தில் சிறுபான்மை மக்களின் கோரிக்கையை ஏற்று கபர்கஸ்தான் மற்றும் கல்லறை தோட்டங்கள் அமைக்க ரூ.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாநகர பகுதி மக்கள் வைத்த பல்வேறு கோரிக்கைகளுக்கும் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு வருகின்றன. இது தொடர்பான பணிகளுக்காக தமிழக நிதிநிலை அறிக்கையில் தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சூப்பர் எல்நினோ, வறட்சி போன்றவையால் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்யும் வகையில் அரசு பல்வேறு ஆலோசனை கூட்டம் நடத்தி ரேசன் கடைகள் மூலமாக பல்வேறு பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர வேண்டியது மிகவும் முக்கியமானது. கடந்த 5 ஆண்டு கால தி.மு.க ஆட்சியில் சுமார் 9,000 கொலைகள் நடந்துள்ளன. கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்த இதுபோன்ற கவலைக்குரிய சம்பவங்கள் இனியும் நடக்கக் கூடாது என்பதில் முதல்வர் தீவிர கவனம் செலுத்தி, கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆனாலும், தொடர்ந்து நடக்கும் கொலைச் சம்பவங்கள் வேதனை அளிப்பதாக உள்ளது.

.

த.வெ.க அரசு பொறுப்பேற்று 6 மாதங்களே முடிவடைந்துள்ளன. இது ஒரு 'தேனிலவு காலம்'.

தற்போது நடைபெறும் கொலை சம்பவங்கள் தொடர்வதற்கு மது மற்றும் போதை பழக்கமே மிக முக்கிய காரணியாக உள்ளது. பூரண மதுவிலக்கு என்பதே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் உறுதியான கொள்கை. அதேவேளையில், மது மற்றும் போதைப் பழக்கத்தை முற்றிலும் தடுப்பதற்குச் சில கால அவகாசம் தேவைப்படுகிறது.

.

இந்தியா முழுவதும் போதைப்பொருட்களுக்கு எதிராக தீவிர தடுப்பு நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. தமிழகத்தில் போதை புழக்கத்தை முற்றிலுமாக தடுக்க த.வெ.க அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மீது இதுவரை புகார் இல்லை. சமூகவலைதளத்தில் தான் இது போன்ற சம்பவம் பேசப்படுகிறது. அவர் மீது தவறு இருந்தால் அரசு கடும் நடவடிக்கைகள் எடுக்கும். அதே போல, துறையூர் எம்.எல்.ஏ தாக்குதலில் ஈடுபட்டதாக பரவும் வீடியோவும், வேண்டுமென்றே பரப்பபடுகிறதா? எனப் பார்க்கவேண்டும்" எனத் தெரிவித்தார்.

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →