உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா

"ஓ, ஏதோ கொலைப் பந்தயம் நடக்கிறது போல..!" – ராஜ்மோகன் பதிலுக்கு சுப.வீரபாண்டியன் காட்டம்

தினப்புயல் • • 3 மணி நேரங்கள் முன்பு • சுமார் 1 நிமிடம்
"ஓ, ஏதோ கொலைப் பந்தயம் நடக்கிறது போல..!" – ராஜ்மோகன் பதிலுக்கு சுப.வீரபாண்டியன் காட்டம்
வாசிப்பு
Facebook Telegram

தீபாவளி (நவம்பர் 8) அன்று, தமிழ்நாட்டில் 17 கொலைகள் நடந்துள்ளன. இது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களையும், கேள்விகளையும் எழுப்பி வருகின்றன.

இந்தக் கொலைச் சம்பவங்கள் குறித்து அமைச்சர் ராஜ்மோகனிடம் கேட்கப்பட்டபோது, “தீபாவளி பண்டிகை நாளில் கொலைச் சம்பவங்கள் நடைபெறுவது முதல் முறையல்ல.

கடந்த ஆண்டு தீபாவளியன்று 6 கொலைகளும், அதற்கு முந்தைய ஆண்டு 11 கொலைகளும் நடைபெற்றுள்ளன.

பண்டிகை நாள்களில் இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெறுவது புதிதல்ல. திட்டமிட்டு ஆளும் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன” என்று பதிலளித்திருந்தார்.

.அஜித் தோவல் மீது குற்றச்சாட்டு! அமெரிக்க நீதிமன்றம் அனுப்பிய சம்மன் – இந்தியா என்ன சொல்கிறது?.

ராஜ்மோகனின் பதிலுக்குத் திராவிடப்பள்ளியின் இயக்குநர் சுப.வீரபாண்டியன், “தீபாவளி நேரத்தில் தமிழ்நாட்டில் 17 கொலைகள் நடந்துள்ளனவே என்று நிருபர்கள் கேட்க,

அமைச்சர் ராஜ்மோகன், சென்ற தீபாவளி நேரத்தில் எவ்வளவு கொலைகள், அதற்கு முந்திய தீபாவளியில் எவ்வளவு கொலைகள் என்று ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்கிறார்.

ஓ…. ஏதோ கொலைப் பந்தயம் நடக்கிறது போல் இருக்கிறது!” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →