உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா

சடலமாக மீட்கப்பட்ட 5 மீனவர்கள்: “புயல் நேரத்தில் கடலுக்குள் செல்ல அனுமதி தந்தது யார்?" – உதயநிதி

தினப்புயல் • • 13 மணி நேரங்கள் முன்பு • சுமார் 1 நிமிடம்
சடலமாக மீட்கப்பட்ட 5 மீனவர்கள்: “புயல் நேரத்தில் கடலுக்குள் செல்ல அனுமதி தந்தது யார்?" – உதயநிதி
வாசிப்பு
Facebook Telegram

சென்னை காசிமேடு துறைமுகத்திலிருந்து கடந்த அக்டோபர் 29-ம் தேதி செல்வழகன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் ஓட்டுநர் சூர்யா (49) தலைமையில் குப்பன் (48), மோகன் (47), முருகன் (48), குப்புசாமி (58), அரவிந்த் (40), நாராயணன் (57), ராஜேஷ் (52), விஜயகாந்த் (44) ஆகிய 9 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

ஆந்திர மாநிலம் நிசாம்பட்டினம் அருகே இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது புயல் எச்சரிக்கை விடப்பட்டதை அடுத்து, படகு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. இருப்பினும், நவம்பர் 3-ம் தேதி அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் அவர்கள் ராமாயபட்டினம் நோக்கிப் புறப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது கடல் சீற்றத்தில் சிக்கியதில் படகின் இன்ஜின் திடீரென பழுதாகி செயலிழந்தது.

.

இதுகுறித்து கடலோரக் காவல் படைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டபோதிலும், அதற்குள் அலைகளின் சீற்றத்தால் படகு அடித்துச் செல்லப்பட்டு 9 பேருடனான தொடர்பும் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. மீனவர்கள் மாயமாகி 3 நாட்களாகியும் எந்தத் தகவலும் இல்லாததால், ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட உறவினர்கள் காசிமேட்டில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதனால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. காவல்துறையினர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.

.

இதற்கிடையில், மாயமானவர்களைத் தேடும் பணி தொடங்கபட்டது. இந்த நிலையில்தான், முரசு புயல் நேரத்தில் நடுக்கடலில் சிக்கி மாயமான சென்னை காசிமேடு மீனவர்கள் 5 பேரின் உடல்கள், ஆந்திர கடலோர பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “முரசு புயல் நேரத்தில் நடுக்கடலில் சிக்கி மாயமான சென்னை காசிமேடு மீனவர்கள் 9 பேரின் உடல்கள், ஆந்திர கடலோர பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அந்த மீனவச் சகோதரர்களை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

.

மீனவர்கள் மாயமானது தொடர்பாக இங்குள்ள சோப்ளாங்கி அரசுக்கு தகவல் தெரிவித்தும் அவர்களை மீட்பது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இறந்தவர்களின் உறவினர்கள் கண்ணீரோடு கூறுகின்றனர். புயல் நேரத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதி தந்தது யார்? ஒருவேளை மீனவர்கள் முன் கூட்டியே கடலுக்குச் சென்றிருந்தால், Wireless கருவிகள் மூலம் தொடர்பு கொண்டு அவர்கள் கரை திரும்புவதை உறுதி செய்திருக்க வேண்டிய அரசு, எப்படி தவறியது?

.

உயிரைப் பணயம் வைத்து தொழில் செய்யும் மீனவர்களின் உயிரோடு விளையாடும் அளவுக்கு அலட்சியம் காட்டியுள்ள இந்த ஆட்சியாளர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைவிட இன்னும் அதிகமான இழப்பீட்டை அரசு தரப்பில் வழங்க வேண்டும். இது மாதிரியான துயரங்கள் இனியும் நடக்காமல் இருக்க, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மிக முக்கியமாக கடலுக்குச் செல்லும் ஒவ்வொரு மீனவரும் ஆயுள் காப்பீடு செய்துள்ளதை உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

.போராடும் மீனவர்கள்; மனம் மாறாத முதல்வர் விஜய்? – பட்டினப்பாக்கத்தில்தான் புதிய தலைமைச் செயலகம்!.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

<a href="https://tinyurl.com/2b963ppb">இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…</a><a href="https://tinyurl.com/2b963ppb"> https://tinyurl.com/2b963ppb</a>

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… <a href="https://tinyurl.com/2b963ppb">https://tinyurl.com/2b963ppb</a>

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →