கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வி.எஸ்.பாபு அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சுவாசக்கருவிகளின் மூலம் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து கவனித்து வருவதாக மருத்துவமனை தரப்பிலிருந்து அறிக்கை வெளியானது. அமைச்சர்களும் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதை உறுதிப்படுத்தினர்.
இந்த நிலையில், வி.எஸ்.பாபுவின் உடல்நிலை கவலைக்கிடமாகி சிகிச்சை பலனளிக்காமல் இன்று மதியம் 2:24 மணிக்கு அவர் உயிரிழந்திருப்பதாக மருத்துவமனை இப்போது அறிவித்திருக்கிறது.
.
வி.எஸ்.பாபு மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவரது எக்ஸ் பதிவில், “கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
திரு.வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்." என பதிவிட்டுள்ளார்
.'72 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பின் காலமானார் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு!' – விவரம் என்ன?








