கடந்த செப்.9 ஆம் தேதியன்று மூச்சுத்திணறல் காரணமாக தவெக கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ் பாபு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
70 நாட்களுக்கு மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார்.
இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, " அண்ணன் வி.எஸ் பாபு அன்பானவர். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர். சிரித்த முகத்துக்கு சொந்தக்காரர்.
.
எங்கள் தலைவரின் நம்பிக்கையையும், அன்பையும் பெற்றவர். தவெகவின் கடினமான காலக்கட்டத்தில் எங்களுடன் சேர்ந்து பணியாற்றியவர். குறிப்பாக வட சென்னையின் முகமாக இருந்தவர். அவர் தவெகவில் இணையும்போது 'சென்னையில் மக்கள் இன்னும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர். குறிப்பாக வடசென்னையில் மக்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர்' என்று தலைவரிடம் சொன்னார்.
.வி.எஸ் பாபுவுக்கு தீவிர சிகிச்சை; மருத்துவமனை வந்த ஆதவ் அர்ஜுனா – போலீஸ் குவிப்பு!.
அவர் இழப்பு ஒரு குடும்பத்தின் இழப்பு அல்ல. கட்சியின் இழப்பு அல்ல. இது ஒட்டுமொத்த வடசென்னையின் இழப்பு. என்னை அவர் மகனாக பார்த்தார். வட சென்னை மக்களுக்காக தன்வாழ்க்கையை அர்பணித்தார். அவர் தான் தலைவரை கொளத்தூரில் பிரச்சாரம் செய்ய அழைத்தார்.
.
அவருக்காகத் தான் கொளத்தூரில் பிரச்சாரமும் நடந்தது. அவருடைய வழியில் கொளத்தூர் தொகுதிக்கும், வட சென்னைக்கும் எல்லா உதவிகளையும் செய்வோம். கனத்த இதயத்துடன் எங்கள் மூத்த உறுப்பினர் இழப்பைப் பதிவு செய்கிறோம்" என்று பேசியிருக்கிறார்.
.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
<a href="https://tinyurl.com/2b963ppb">இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…</a><a href="https://tinyurl.com/2b963ppb"> https://tinyurl.com/2b963ppb</a>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… <a href="https://tinyurl.com/2b963ppb">https://tinyurl.com/2b963ppb</a>








