உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா புதுப்பிப்பு

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டும் மத்திய அரசு – கவனம் பெறுவது எதனால்?!

தினப்புயல் • • இப்போதே • சுமார் 1 நிமிடம்
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டும் மத்திய அரசு – கவனம் பெறுவது எதனால்?!
வாசிப்பு
Facebook Telegram

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் வரும் 30ம் தேதி முதல் டிசம்பர் 3ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்களவையில் நவம்பர் 30-ம் தேதியும், மாநிலங்களவையில் டிசம்பர் 2-ம் தேதியும் இந்தக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். இருப்பினும், இந்தக் கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் அமர்வுகள் முடிவடைந்து 105 நாள்கள் கடந்த நிலையிலும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அதை இன்னும் முறையாக முடிக்கவில்லை.

.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரின் போது, 2023 மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கும், தொகுதி மறுவரையறை செய்வதற்கு ஏதுவாக '2026 அரசியலமைப்பு (131வது திருத்த) மசோதாவை' பாஜக தலைமையிலான அரசு மக்களவையில் தாக்கல் செய்தது. அப்போது அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று சட்ட முன்வரைவுகளில் ஒன்றான இந்த மசோதா நிறைவேற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகள் தேவைப்பட்டன.

.

ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எந்த அவையிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் பலம் இல்லாததால், இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டது. எனவே, தொகுதி மறுவரையறை மசோதாவுக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறுவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருப்பதாலேயே, மழைக்காலக் கூட்டத்தொடரை முறையாக முடிக்காமல் வைத்துள்ளதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. புதிய கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டுமானால் குறைந்தபட்சம் 14 நாள்கள் முன்னறிவிப்பு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதியே குளிர்காலக் கூட்டத்தொடருக்கான தேதிகளை மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், நடப்பு ஆண்டில் குளிர்காலக் கூட்டத்தொடருக்கான தேதிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

.“தவெக ஆட்சியைக் கலைக்க வேண்டும்; ஆளுநர் அர்லேகர் சொன்ன பதில்..!" – நயினார் நாகேந்திரன்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

<a href="https://tinyurl.com/2b963ppb">இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…</a><a href="https://tinyurl.com/2b963ppb"> https://tinyurl.com/2b963ppb</a>

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… <a href="https://tinyurl.com/2b963ppb">https://tinyurl.com/2b963ppb</a>

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →