உலகின் முன்னணி AI சிப் நிறுவனமான என்விடியாவின் (Nvidia) இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்துவந்த ஜென்சன் ஹுவாங், தன்னைச் சுற்றியெழுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் பதவி விலகியுள்ளது தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உணவகத்தில் பாத்திரம் கழுவும் பணியில் தொடங்கி, உலகின் மிகப்பெரிய தொழில்நுட்பச் சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பிய ஒருவரின் இந்தத் திடீர் விலகல், என்விடியாவை இதுவரை சந்திக்காத பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

தைவானில் தொடங்கிய பயணம்

1963-ம் ஆண்டு தைவானின் தலைநகர் தைபேயில் பிறந்தவர் ஜென்சன் ஹுவாங். அவரது சிறுவயது தைவானிலும் தாய்லாந்திலும் கழிந்தது. பின்னர், தனது சகோதரருடன் அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள ஒனிடா பாப்டிஸ்ட் கல்வி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டார். அப்போது அவருக்கு வயது ஒன்பது. அதன்பிறகு அவரது பெற்றோரும் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தனர்.

அமெரிக்காவில் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்த ஹுவாங், தனது 15-வது வயதில் டென்னி'ஸ் (Denny’s) உணவகத்தில் பாத்திரம் கழுவும் பணியில் சேர்ந்தார். பின்னர் அங்கேயே உணவு பரிமாறும் பணிக்கும் உயர்ந்தார். அந்த உணவகத்தில் வேலை செய்த அனுபவம், கடின உழைப்பு, நேர மேலாண்மை, நெருக்கடியான சூழலில் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றைக் கற்றுக்கொடுத்ததாகப் பின்னாளில் அவரே குறிப்பிட்டிருக்கிறார்.
ஒரே நேரத்தில் படிப்பிலும் முழு கவனம் செலுத்திய அவர், 16 வயதில் பள்ளிப் படிப்பை முடித்தார். ஓரிகான் மாநிலப் பல்கலைக்கழகத்தில் மின்பொறியியலில் இளங்கலைப் பட்டமும், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

என்விடியாவின் தொடக்கமும் ஆரம்பகாலச் சோதனைகளும்

படிப்பை முடித்த பிறகு, 1984-ல் AMD நிறுவனத்தில் பணியைத் தொடங்கிய அவர், பின்னர் LSI Logic நிறுவனத்தில் பணியாற்றினார். சிப் தயாரிப்பு மற்றும் கணினித் தொழில்நுட்பத்தில் பெற்ற அனுபவமே, சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கும் எண்ணத்துக்கு அடித்தளமிட்டது.
1993-ல் தனது நண்பர்களும் பொறியாளர்களுமான கிறிஸ் மலாச்சோவ்ஸ்கி, கர்டிஸ் ப்ரீம் ஆகியோருடன் இணைந்து என்விடியாவைத் தொடங்கினார். கணினி விளையாட்டுகளுக்கான முப்பரிமாணக் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதே அவர்களின் ஆரம்ப இலக்கு.
கலிபோர்னியாவின் சான் ஜோஸில் உள்ள டென்னி'ஸ் உணவகத்தில் அமர்ந்துதான் இந்த நிறுவனத்தைத் தொடங்குவதற்கான யோசனையை மூவரும் விவாதித்தனர். ஒருகாலத்தில் பாத்திரம் கழுவிய அதே உணவகம், பின்னாளில் உலகின் முக்கியமான தொழில்நுட்ப நிறுவனத்தின் பிறப்பிடமாக மாறியது.

ஆனால், தொடங்கிய உடனேயே வெற்றி கிடைத்துவிடவில்லை. என்விடியாவின் முதல் சிப் தயாரிப்பான NV1 எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. சந்தையின் தேவைக்கும் அதன் தொழில்நுட்பத்துக்கும் இடையே இருந்த இடைவெளி நிறுவனத்தைப் பெரும் நிதி நெருக்கடிக்குள் தள்ளியது.
செகா (Sega) நிறுவனத்துடனான ஒப்பந்தமும் சிக்கலில் முடிந்தது. அந்தச் இக்கட்டான கட்டத்தில் செகா அளித்த 5 மில்லியன் டாலர் நிதி உதவிதான், நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்துவதற்கு முக்கியமானதாக அமைந்தது. பழைய தொழில்நுட்ப அணுகுமுறையை மாற்றி, புதிய தயாரிப்பில் கவனம் செலுத்தியதன் மூலம் என்விடியா மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியது.
1999-ல் ஜியிபோர்ஸ் 256 (GeForce 256) அறிமுகமானது. இதன் மூலம் கணினியின் கிராபிக்ஸ் செயல்பாடுகளை வேகப்படுத்தும் GPU தொழில்நுட்பத்தில் என்விடியா தனக்கென ஓர் தனி இடத்தை உருவாக்கியது. அதே ஆண்டு நிறுவனப் பங்குகள் பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டன.
.“இனி Nvidia-வின் நிர்வாகக் குழுவிலும் இருக்கமாட்டார்" – ராஜினாமாவை அறிவித்த CEO ஜென்சன்.

கேமிங் சிப்பிலிருந்து AI சாம்ராஜ்யம் வரை

என்விடியாவின் தொலைநோக்குப் பார்வை அதன் GPU தயாரிப்புகளுடன் நின்றுவிடவில்லை. 2006-ல் CUDA என்ற மென்பொருள் கட்டமைப்பை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் GPU-களை கணினி விளையாட்டுகளுக்கு மட்டுமின்றி, அறிவியல் ஆராய்ச்சி, தரவுப் பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் பயன்படுத்த முடிந்தது.
ஆரம்பத்தில் இதன் முக்கியத்துவத்தைப் பலரும் உணரவில்லை. ஆனால், 2012-ல் AlexNet என்ற செயற்கை நுண்ணறிவு மாதிரி படங்களை அடையாளம் காண்பதில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. அதற்குப் பின்னால் என்விடியாவின் GPU தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகித்தது. இதுவே AI துறையில் GPU-களுக்கான தேவையை உயர்த்திய திருப்புமுனையாக அமைந்தது.

அதன்பிறகு தரவு மையங்கள், கிளவுட் சேவைகள், தானியங்கி வாகனங்கள், ரோபோட்டிக்ஸ் எனப் பல துறைகளில் என்விடியா தனது தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தியது. ஹாப்பர், பிளாக்வெல் போன்ற சிப் கட்டமைப்புகள், AI மாதிரிகளை உருவாக்கவும் இயக்கவும் தேவையான கணினிச் சக்தியை வழங்கின. இன்று உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் AI நிறுவனங்களும் என்விடியாவின் சிப்களையே பெரிதும் நம்பியுள்ளன.
இதன் விளைவாக நிறுவனத்தின் வருவாயும் சந்தை மதிப்பும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டன. 2026 நிதியாண்டில் என்விடியாவின் முழு ஆண்டு வருவாய் 215.9 பில்லியன் டாலராக இருந்தது. AI தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி என்விடியாவை உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக மாற்றியது.

ஜென்சன் ஹுவாங்கின் தலைமையின் தாக்கம்

என்விடியாவின் இந்த அசாத்திய வளர்ச்சிக்கு ஜென்சன் ஹுவாங்கின் தலைமைப் பண்பே முக்கியக் காரணம். தொழில்நுட்ப மாற்றங்களை முன்கூட்டியே கணித்து, நீண்டகால முதலீடுகளைச் செய்யும் அவரது துணிச்சலான அணுகுமுகம் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டது.
குறிப்பாக, AI வளர்ச்சி வேகம் பெறுவதற்கு முன்பே GPU-களைப் பிற துறைகளிலும் பயன்படுத்துவதற்கான அடித்தளத்தை அவர் அமைத்ததே அவரது முக்கியத் திருப்புமுனை எனலாம்.

கருப்பு நிறத் தோல் ஜாக்கெட்டுடன் தொழில்நுட்ப மாநாடுகளில் தோன்றும் அவரது தோற்றம், என்விடியாவின் அடையாளமாகவே மாறியது. உலகத் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அவர், உலகளாவிய AI புரட்சியின் முக்கிய முகமாகவும் உருவெடுத்தார்.
ஆனால், ஒரு நிறுவனத்தின் வெற்றியும் அதன் தலைவரின் செல்வாக்கும் உச்சத்தில் இருக்கும்போது ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள் எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு 2026 நிகழ்வுகள் சாட்சியாக அமைந்துள்ளன.

சர்ச்சைகளும் பதவி விலகலும்

ஜென்சன் ஹுவாங்கின் தனிப்பட்ட உறவுகள் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் என்விடியாவுக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. நிறுவன ஊழியர்களுடனான உறவுகள் குறித்தும், என்விடியாவின் வாடிக்கையாளர் நிறுவனமான மெகாஸ்பீட் (Megaspeed) நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகி ஆலிஸ் ஹுவாங் (Alice Huang) என்பவருடனான தொடர்பு குறித்தும் தகவல்கள் பரவின.

மேலும், அமெரிக்க உளவு அமைப்புகள் ஆலிஸ் ஹுவாங் சீனாவுக்குத் தகவல் அளித்திருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. சீனா இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. அமெரிக்க அரசு தன்னிடம் இதுபோன்ற சந்தேகங்களை நேரடியாகத் தெரிவிக்கவில்லை என்றும் ஜென்சன் ஹுவாங் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரங்கள் குறித்து என்விடியாவின் சுயாதீன இயக்குநர்கள் விசாரணையைத் தொடங்கினர். நிறுவனத்தின் ரகசியத் தகவல்கள் அல்லது தேசியப் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் பாதிக்கப்பட்டதாக நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று என்விடியா தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டது.
இருப்பினும், சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு ஜென்சன் ஹுவாங் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, தலைவர் மற்றும் இயக்குநர் குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து விலகினார்.
அவருக்குப் பதிலாக, 2013 முதல் நிறுவனத்தின் நிதித் தலைவராகப் பணியாற்றி வந்த கோலெட் கிரெஸ் (Colette Kress), இடைக்காலத் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். நிரந்தரத் தலைமைச் செயல் அதிகாரியைத் தேர்வு செய்யும் பணியை இயக்குநர் குழு தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.

என்விடியாவுக்கு முன்னால் நிற்கும் சவால்கள்

ஜென்சனின் திடீர் பதவி விலகல் தனிப்பட்ட விவகாரமாக மட்டும் நின்றுவிடவில்லை. அது பங்குச் சந்தையிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. அக்டோபர் தொடக்கத்தில் எட்டிய உச்சத்திலிருந்து நவம்பர் மத்தியில் என்விடியாவின் பங்கு மதிப்பு 30 சதவீதத்துக்கும் அதிகமாகக் குறைந்துள்ளது. இதனால் நிறுவனத்தின் சந்தை மதிப்பில் 1.8 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை கரைந்துள்ளது.

இதற்கிடையில், அமெரிக்கா-சீனா இடையிலான தொழில்நுட்பப் போரும் என்விடியாவுக்குத் தொடர்ந்து சவாலாகவே நீடிக்கிறது. மேம்பட்ட AI சிப்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதில் அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகள், அந்நாட்டு சந்தையில் நிறுவனத்தின் வணிக வாய்ப்புகளைப் பாதிக்கின்றன. அதே நேரத்தில், AMD, கூகுள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் தங்களது சொந்த AI சிப் தொழில்நுட்பங்களை வேகமாக மேம்படுத்தி வருவது போட்டியை மேலும் கடுமையாக்கியுள்ளது.
மற்றொரு பக்கம், AI நிறுவனங்கள் தரவு மையங்களுக்காகச் செலவிடும் பெரும் தொகை எதிர்காலத்தில் லாபகரமான வருவாயை ஈட்டித் தருமா என்ற சந்தேகமும் சந்தையில் எழுந்துள்ளது. AI முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்தாலும், அந்த முதலீடுகளுக்கான வருமானம் எந்தளவுக்கு இருக்கும் என்பதை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
.காதல், உளவு, AI சிப்கள்… என்விடியா CEO-வைச் சுற்றி வெடித்த சர்ச்சை!