உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா

பெருந்துறை: அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க ஜெயக்குமார் யார்? ஆதரவு அமைச்சர்களால் சிக்கலில் அதிகாரிகள்!

தினப்புயல் • • 21 மணி நேரங்கள் முன்பு • சுமார் 1 நிமிடம்
பெருந்துறை: அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க ஜெயக்குமார் யார்? ஆதரவு அமைச்சர்களால் சிக்கலில் அதிகாரிகள்!
வாசிப்பு
Facebook Telegram

2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜெயக்குமார். அடுத்த சில தினங்களில் தன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து கொண்டார். ஜெயக்குமாரின் இந்த நடவடிக்கை அதிமுக மட்டுமின்றி தொகுதியிலும் பெரிய அளவில் எதிர்ப்பை ஏற்படுத்தியது. காலியாக உள்ள பெருந்துறை தொகுதிக்கான இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தவெக வேட்பாளராக ஜெயக்குமார் மீண்டும் போட்டியிடுவார் என அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கட்சி நிகழ்ச்சிகளில் பேசி வருகின்றனர்.

.

இந்த நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் விஜய் பாலாஜி ஆகியோர் ஈரோட்டில் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள், அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டங்கள் ஆகியவற்றில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார் ஜெயக்குமார். அண்மையில் விஜய் பாலாஜி தலைமையில் நடைபெற்ற அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன், அமைச்சருடன் இணைந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். "அரசின் எந்தவொரு பதவியிலும் இல்லை, மக்கள் பிரதிநிதியாகவும் இல்லாத ஒருவர் அரசு வளர்ச்சிப் பணி ஆய்வுகளில் எப்படி பங்கேற்க முடியும்? நலத்திட்ட உதவிகளை வழங்க ஜெயக்குமார் யார்?" என்று அதிமுக நிர்வாகிகள் அரசு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பான விவாதங்கள் இணையத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →