உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா

"எம்.ஜி.ஆர் துரைமுருகனை தன் கட்சியில் சேர அழைத்தார், ஆனால் அண்ணன்..!" – மு.க.ஸ்டாலின் பகிர்வு

தினப்புயல் • • 1 நாள் முன்பு • சுமார் 1 நிமிடம்
"எம்.ஜி.ஆர் துரைமுருகனை தன் கட்சியில் சேர அழைத்தார், ஆனால் அண்ணன்..!" – மு.க.ஸ்டாலின் பகிர்வு
வாசிப்பு
Facebook Telegram

முன்னாள் அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனின் இல்லத் திருமண விழா இன்று (நவ.1) சென்னையில் நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்தத் திருமண விழாவில் துரைமுருகன் குறித்து பேசிய ஸ்டாலின், " தமிழ்நாட்டில் எம்ஜிஆர் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தப்போது அந்த ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் அண்ணன் துரைமுருகன்.

.

சட்டமன்றத்தில் சிறப்பாக பேசக்கூடியவர். சட்டமன்றத்தில் தன்னுடைய அழுத்தத்தை எடுத்து சொல்லக்கூடியவர். அன்றைய அதிமுக ஆட்சி அவர் மீது நடவடிக்கை எடுத்து சட்டமன்றத்திற்கு வரக்கூடாது என்று சொல்லி தண்டனைக் கொடுத்தது.

அந்தத் தண்டனையை கலைஞர் கழக பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தி இடி, மின்னல், மழை என்ற தலைப்பில் பேசச் சொல்லி தமிழ்நாடு முழுவதும் சுற்றி வரச் சொன்னார். மின்னல் என்ற தலைப்பில் அண்ணன் துரைமுருகன் பேசிய பேச்சுக்கள் எல்லாம் இன்றைக்கும் தமிழ்நாட்டில் உள்ளத் தெருக்களில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

.

16 வயதில் கிளை கழகத்தின் செயலாளராக இருந்து படிப்படியாக உயர்ந்து வளர்ந்து இன்று ஒரு மாபெரும் இயக்கத்தின் பொதுச்செயலாளராக மிகப்பெரிய பொறுப்பிலே இருந்து கொண்டிருக்கிறார்.

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் பொது வாழ்வில் ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் அண்ணன் துரைமுருகன். எம்ஜிஆர் அவர்கள் கண்டெடுத்து தலைவர் கலைஞர் அவர்கள் வளர்த்தெடுத்த ஒரு மாவீரன் தான் அண்ணன் துரைமுருகன் அவர்கள்.

.

திமுகவில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கியபோது எம்ஜிஆர் அண்ணன் துரைமுருகனை அழைத்திருக்கிறார். ஆனால் அண்ணன் துரைமுருகன் 'நீங்கள் என்னைப் பாராட்டி இருக்கலாம், அன்பைப் பொழிந்திருக்கலாம். ஆனால் கொள்கை என்று வரும்போது எனக்கு தலைவர் கலைஞர் தான். நான் அவரோடு தான் இருப்பேன்' என சொல்லியிருக்கிறார்" என துரைமுருகன் குறித்து நெகிழ்ந்து பேசியிருக்கிறார் ஸ்டாலின்.

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →