உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா

தேனி சிறையில் 17 கைதிகள் தப்பிய எதிரொலி : மதுரை சிறை கைதிகள் நடட்தும் உணவகம், பெட்ரோல் பங்க் மூடல்!

தினப்புயல் • • 7 மணி நேரங்கள் முன்பு • சுமார் 1 நிமிடம்
தேனி சிறையில் 17 கைதிகள் தப்பிய எதிரொலி : மதுரை சிறை கைதிகள் நடட்தும் உணவகம், பெட்ரோல் பங்க் மூடல்!
வாசிப்பு
Facebook Telegram

மதுரையில் உள்ள மத்திய சிறையில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். இவர்களில் 7 வருடங்களுக்கு மேல் ஆயுள் தண்டனை பெற்று நன்னடத்தையுடன் இருக்கும் சுமார் 60 சிறைவாசிகளை கொண்டு கடந்த 2020 ஆம் ஆண்டில் மதுரை மத்திய சிறை துறை சார்பில் பெட்ரோல் நிலையம், கோழி இறைச்சி கடை மற்றும் உணவகம் ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன.

.

இதில் பணியாற்றுபவர்களுக்கு  மாதம் ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓடிய நிலையில் பாதுகாப்பு நடவடிக்காக மதுரை மத்திய சிறை துறை சார்பில் செயல்பட்டு வந்த பெட்ரோல் நிலையம், உணவகம் மற்றும் கோழி இறைச்சி கடைகள் தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைகளில் நன்னடத்தை சிறைவாசிகளைக் கொண்டு செயல்பட்டு வரும் கடைகளை மறு உத்தரவு வரும் வரை மூடி வைக்க தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி உத்தரவிட்டதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டதாக மதுரை மத்திய சிறைத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

.

சிறைவாசிகள் நடத்தி வந்த உணவகங்களில் உள்ள உணவு பொருள்கள் விலை குறைவானதாகவும், தரம் நிறைந்ததாகவும் வழங்கபட்டு வந்த நிலையில் அவை மூடப்பட்டிருப்பதால் வாடிக்கையாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தீபாவளி பண்டிகையின் போது மூடப்பட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. !

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →