ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கான சீனாவின் ஷென்சென் நகருக்குச் சென்றிருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின்.
அங்கு அவருடன் இரண்டு ரஷ்ய கடற்படை அதிகாரிகள் ஒரு பெட்டியை எடுத்துச் செல்கிற வீடியோ காட்சிகள் கவனம் பெற்றுள்ளன.
அது என்ன பெட்டி?
ரஷ்யாவின் அணு ஆயுதக் கட்டுப்பாட்டு அமைப்பின் மிக முக்கிய அங்கமான ‘செகெட்’ தான் அந்தப் பெட்டி என்று கூறப்படுகிறது.
செகெட் என்பது ரஷ்யாவின் நடமாடும் அணு ஆயுதக் கட்டுப்பாட்டு அமைப்பின் ஒரு பகுதியாகும்.
.“உண்போம், குடிப்போம், கொண்டாடுவோம் என்பது இந்தியக் கலாசாரம் அல்ல" – சேமிப்பை வலியுறுத்திய மோடி.
ரஷ்ய நாட்டின் முப்படைத் தளபதி என்ற முறையில், ரஷ்ய அதிபர் தனது மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் நாட்டின் அணு ஆயுதக் கட்டுப்பாட்டு மையங்களுடன் மிகவும் பாதுகாப்பாகத் தொடர்பு கொள்ள இது உதவுகிறது.
கூடுதலாக, இது தரையிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட போர் விமானங்கள் உள்ளிட்ட நாட்டின் ஒட்டுமொத்த அணு ஆயுதப் படைகளையும் கண்காணிக்கிறது.
.
செகெட் பெட்டியால் தன்னிச்சையாக அணு ஆயுதங்களை ஏவ முடியுமா?
முடியாது. ரஷ்யத் தலைமை ராணுவத் தளபதிகளுடன் தொடர்பு கொண்டு, நாட்டின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்க உதவும் ஒரு விரிவான கட்டுப்பாட்டு அமைப்பின் அங்கமாகவே இது செயல்படுகிறது.
புதின் பயணம் செய்யும்போது ‘செகெட்’ பெட்டியை யார் சுமந்து செல்வார்கள்?
புதின் எங்கு பயணம் செய்தாலும், அதற்கெனப் பிரத்தியேகமாக நியமிக்கப்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்கள் அந்தப் பெட்டியைச் சுமந்து செல்கின்றனர்.
புதினின் சீனப் பயண வீடியோவில், ‘செகெட்’ பெட்டியை இரண்டு ரஷ்ய கடற்படை அதிகாரிகள் சுமந்து செல்கின்றனர்.
.Trillion Dollar மதிப்பில் Anthropic; "இந்தியச் சந்தை இன்னும் முன்னேற வேண்டுமோ?"- உதய் கோட்டக் கேள்வி








