உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா

திருவாரூர்: டேங்கில் இருந்து உப்பு கலந்து வரும் குடிநீர்; உயிரிழப்பு ஏற்படுவதாக மக்கள் அச்சம்

தினப்புயல் • • 8 மணி நேரங்கள் முன்பு • சுமார் 1 நிமிடம்
திருவாரூர்: டேங்கில் இருந்து உப்பு கலந்து வரும் குடிநீர்; உயிரிழப்பு ஏற்படுவதாக மக்கள் அச்சம்
வாசிப்பு
Facebook Telegram

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள பைத்தஞ்சேரி பகுதியில் 100க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியின் குடிநீர் தேவைக்காக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் அதிக அளவு உப்புத்தன்மையுடன் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

.

இந்த உப்பு நீரைத் தொடர்ந்து குடித்து வருவதால் சிறுநீரகத் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் நலக் குறைபாடுகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இது குறித்து அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியும் நிரந்தரமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாகச் சொல்கிறார்கள்.

இந்நிலையில், குடிநீரில் மேலும் உப்பு அதிகரித்து விட்டது. இதைக் குடிப்பதால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. இளம் வயதுடைய இளைஞர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்டோர் திடீரென உயிரிழக்கின்றனர்.

.

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே வருகிறது. இதனால் அப்பகுதியினர் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். குடிநீரில் அதிகமாக இருக்கும் உப்பே இவற்றுக்குக் காரணம் எனப் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். ஆனாலும் குடிநீரின் தரத்தை ஆய்வு செய்து எதனால் பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்கவும் மருத்துவ முகாம் நடத்தி நோய் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிய வேண்டும் எனவும் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

.

இதுகுறித்து கிராம மக்கள் தரப்பில் கூறுகையில், "கிட்டதட்ட 15 ஊராட்சிகளில் குடிநீர் உப்பாக மாறி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பைத்தஞ்சேரி கிராமத்தினர் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளோம். 10 பேர் திடீரென இறந்து விட்டனர். நான்கு பேர் டயாலிசிஸ் செய்து வருகின்றனர். சிலர் சிகிச்சையிலும் இருக்கின்றனர். இவற்றுக்குக் காரணம் உப்பு கலந்த தண்ணீர்தான் என நாங்கள் கருதுகிறோம்.

வேறு எதுவும் காரணமாக இருந்தாலும் ஆய்வு செய்து அதைக் கண்டு பிடித்து எங்களைக் காக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. தினக்கூலிகளான எங்க கோரிக்கைக்குச் செவி சாய்த்து உடனடியாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் சுகாதாரமான குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

.“தவெக-வின் பொறுப்பின்மை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல" – அண்ணாமலை காட்டம்!

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →