உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா

உடுமலை: அலட்சிய மருத்துவமனையால் பறிபோன இளைஞரின் கால்; ரூ. 35.68 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

தினப்புயல் • • 10 மணி நேரங்கள் முன்பு • சுமார் 1 நிமிடம்
உடுமலை: அலட்சிய மருத்துவமனையால் பறிபோன இளைஞரின் கால்; ரூ. 35.68 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
வாசிப்பு
Facebook Telegram

திருப்பூர் மாவட்டம் மருள்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான தினேஷ்குமார் (24) 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் பைக்கில் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டு, உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் உயர் சிகிச்சைக்காக உடுமலையில் உள்ள கோகுல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், கோகுல் தனியார் மருத்துவமனையில் அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், இடது காலின் நிலைமை மிகவும் மோசமடைந்திருக்கிறது. நிலைமை கைமீறிப் போனதால், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், உயிரைக் காப்பாற்ற வேறு வழியின்றி அவரின் இடது காலை முட்டிக்குக் கீழ் அகற்றியுள்ளனர். 24 வயதில் கால் அகற்றப்பட்டு, 85 சதவீத மாற்றுத்திறனாளியாக மாறி, தனது வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார். உடுமலையில் உள்ள கோகுல் மருத்துவமனையின் கவனக்குறைவு மற்றும் தவறான சிகிச்சையே தன்னுடைய கால் பறிபோகக் காரணம் எனக் கூறி, திருப்பூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தினேஷ்குமார் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்து வந்த நுகர்வோர் நீதிமன்றம், மருத்துவமனையின் சேவைக் குறைபாட்டை உறுதி செய்துள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞருக்கு கோகுல் மருத்துவமனை நிர்வாகம் இரண்டு மாத காலத்திற்குள் ரூ.35.68 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

.“தவெக-வின் 60 – 70 எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்" – திமுக ரகுபதி சொல்லும் கணக்கு!

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →